logo
அமுதா சிவந்தி ஆதித்தன் மறைவு வேதனையும், வருத்தமும் தருகிறது

மாண்புமிகு மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் இரங்கல் செய்தி

மறைந்த பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் மனைவியும், தந்தி குழுமத்தின் இயக்குனர் திரு பாலசுப்பிரமணியன் ஆதித்தனாரின் தாயும் ஆன திருமதி. அமுதா சிவந்தி ஆதித்தன் அவர்கள் இன்று (01.12.2017) மாலை மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தந்தி குழுமத்தின் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த திருமதி. அமுதா சிவந்தி ஆதித்தன் அவர்களது ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்

–       பொன். இராதாகிருஷ்ணன்