logo
ஓகி புயலினால் சிக்குண்டு கடலில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களை காக்க வேண்டுகோள்

மாண்புமிகு மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலக பத்திரிகை செய்தி

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை இன்று (01.12.2017) நேரில் சந்தித்த மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் மீன் பிடிக்கச் சென்று ஓகி புயலினால் சிக்குண்டு கடலில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களை காக்கவும், போர்கால நடவடிக்கையில் மீட்புப் பணியில் ஈடுபட போதியளவு மீட்புக் கப்பல், கப்பற்படை வீரர்கள் மற்றும் விமானப்படையை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக வேண்டிய உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.