logo
ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

இந்த 2018 ஆங்கிலப்புத்தாண்டு பௌர்ணமி முழுநிலவு நாளில் ஒளிமிகுந்து பிறக்கிறது. 2018 ஒரு ஒளிமயமான ஆண்டாக இருக்கும் என்பதை இயற்கையே சொல்கிறது. அதேபோல அனைத்து மக்களின் வாழ்க்கையும் இருளகன்று ஒளிமயமாக விளங்க வேண்டும் என்பது தான் நம் பிரார்த்தனை.

2018 ஒரு ஊழலற்ற இந்தியாவை இன்று பார்த்துக் கொண்டிருக்கிறது. வறுமையற்ற இந்தியாவைப் பார்க்கப்போகிறது. பசியற்ற இந்தியாவைப் பார்க்கப் போகிறது. அதற்கான ஆங்கிலப்புத்தாண்டு மலரட்டும்.

கறுப்பப்பணம் ஒழிக்கப்பட்டு, அதன் மூலம் பொருளாதாரம் மேம்பட்டு, அன்னிய செலவாணி இருப்பு அதிகரிக்கப்பட்டு, ஏற்றுமதிகள் அதிகமாகி, இறக்குமதிகள் குறைந்து மேக் – இன் – இந்தியா என்று உற்பத்திகள் அதிகரிக்கப்பட்டு கடன் தொல்லைகள் குறைக்கப்பட்டு, பட்டொளிவீசி நம் பாரதக் கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த 2018 ஆம் புத்தாண்டு மேலும் அனைவரின் வாழ்க்கையிலும் இனிமை பொங்கவும் கவலைகள் மங்கிமறையவும் வழிவகை செய்யட்டும்.நாட்டில் தீவிரவாதம் ஒழியட்டும்; இயற்கை சீற்றங்களற்ற பாதுகாப்பான ஆண்டாக மிளிரட்டும். அனைத்து மக்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு உத்திரவாதம் கிடைக்கட்டும்.தமிழக மக்கள் அனைவருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்,

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)