logo
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் மறைவு அதிர்ச்சியை தருகிறது
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் மறைந்துவிட்டார் என்ற செய்தி நமக்கு மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ஒரு தேசிய அக்கறை உடைய ஆன்மீகவாதியை இழந்திருக்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மோதல்களும், கட்டாய மத மாற்றங்களும் ஏற்பட்டபோது தானே களத்திற்கு சென்று இந்து மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை அவர்களோடு இணக்கமாகவும், இதமாகவும் இருந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அனைத்து மதத்தை சார்ந்தவர்களையும் சமமாக மதிக்கக்கூடியவர், ஒரு ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் ஒரு சமுதாயவாதியாகவும், தேசியவாதியாகவும் வாழ்ந்தவர்.
ஆன்மீக சேவையுடன் பல பள்ளிகளை நிறுவி கல்வி சேவைகளையும், பல மருத்துவ மனைகளை நிறுவி மருத்துவ சேவைகளையும், பல சமூக கூடங்களை நிறுவி சமூக சேவைகளையும் செய்து வந்தவர் என்பதை நன்றியுடன் நினைவுக் கூறுவோம்.
இந்து மதம் அனைவருக்கும் சமமானது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் கடுமையான விமர்சனத்திற்கு மத்தியிலும் தூய உள்ளத்தோடு கடுமையாக உழைத்தவர் என்பதை நாம் இங்கு பதிவு செய்ய வேண்டும்.
மதத்திற்க்கான சேவையை தாண்டி மக்களுக்கான சேவையை செய்தவர், பாரத தேசத்திற்கு அவரது மறைவு மிகப் பெரிய இழப்பு.
ஒரு சிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மீகவாதியை பாரதம் இழந்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி சார்பில் அவரின் பக்தர்களுக்கு ஆறுதலையும், அனுதாபங்களையும் தெரிவித்து எங்களது அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்