logo
ஜாதி, மத, பிராந்திய பிரிவினைவாதங்களுக்கு வடகிழக்கு மாநில மக்கள் சாவு மணி அடித்துள்ளனர்

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி

திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா தேர்தல் முடிவு..

வடகிழக்கு மாநிலங்களில் இந்திய தேசியத்திற்கு எதிராக பிரிவினைவாத சக்திகள் இத்தனை ஆண்டுகளாக தலைவிரித்தாடியதை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.விற்கு மகோன்னதமான வெற்றியை தந்துள்ளது. இதற்கு முழுமுதற் காரணமானவர் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் மதிப்பிற்குரிய திரு. அமீத்ஷா அவர்களுக்கும், இவ்வெற்றியை பெற்றுத்தந்த உலகத் தலைவராய் இன்று உயர்ந்து நிற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் ஒட்டுமொத்த இந்தியாவும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

வடகிழக்கில் தேசியம் தழைத்திட இவ்வெற்றிக்காக கடுமையாக உழைத்திட்ட அந்தந்த மாநில பாஜக பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும், வெற்றியைத்தந்த மாநில மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வியடைந்துள்ள கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தோல்வியை மறைக்க உப்புச்சப்பில்லா காரணங்களைச் சொல்லலாம். ஆனால் இதே வடகிழக்கு மாகாணங்களில் முற்காலங்களில் தாங்கள் பெற்ற வெற்றியை எப்படி கொண்டாடின என்பதை இந்த நாடு அறியும். ஆனால் இப்போது இம்மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை தாங்கிக் கொள்ள முடியாமல் இம்மாநிலங்களின் தேர்தலை உள்ளாட்சித் தேர்தலுடன் ஒப்பிடுவதை பார்க்கிறோம்.

இன்றைய மூன்று மாநில தேர்தல் முடிவின் மூலம் கம்யூனிச, காங்கிரஸ் கட்சிகளின் ஜாதி, மத, பிராந்திய பிரிவினைவாதங்களுக்கு வடகிழக்கு மாநில மக்கள் சாவு மணி அடித்துள்ளதை இனியேனும் இக்கட்சிகள் புரிந்து கொள்ளும் என நம்புகிறேன்.

 

– திரு. பொன். இராதாகிருஷ்ணன்