logo
தகுதியான விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை

விவசாயிகளுக்கான இழப்புக் காப்பீட்டு தொகை நீட்டிக்கப்பட்ட கால வரம்பில் காப்பீடு தொகை செலுத்திய விவசாயிகளுக்கு இழப்புக்கான தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் குறித்த காலத்தில் வழங்கவில்லை. இந்த இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தமிழகத்தில் பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வரும் காப்பீட்டு நிறுவனங்களான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், ஐசிஐசிஐ லொம்பார்டு மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளுடன், வேளாண் அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுடன் மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 6/4/2018  புதுடெல்லியில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் 2016-17 ஆண்டு சம்பா சாகுபடிக்கான இழப்பீட்டுத்தொகையை இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் நீட்டிக்கப்பட்ட கால வரம்பில் காப்பீடு தொகை செலுத்திய விவசாயிகளுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. நீட்டிக்கப்பட்ட கால வரம்பில் விவசாயிகள் செலுத்திய காப்பீட்டுத் தொகைக்கு இழப்பீடு வழங்க மறுகாப்பீடு வழங்கிய பொதுக்காப்பீட்டு நிறுவனம் காலம் தாழ்த்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  தகுதியான விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவுறுத்தினார்.

நாட்டில் கடைக்கோடி மகனுக்கும் குறிப்பாக விவசாயிகளுக்கு பலன் சென்றடைய வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பிரதமர் பயிர்க்காப்பீடு கனவுத்திட்டத்தை அனைத்து விவசாயிகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டியது தலையாய கடமை என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.