logo
தமிழ் தாமரை யாத்திரையின் நிறைவு விழா

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தமிழ் தாமரை யாத்திரையின் நிறைவு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது, மாநில தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் தேசிய செயலாளர் திரு. H. ராஜா அவர்களும், மாநில நிர்வாகிகள், கோட்ட பொறுப்பாளர்கள், அணி & பிரிவின் மாநில நிர்வாகிகள், எங்களது அமைப்பு ரீதியான 49 மாவட்ட தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய மாவட்ட தலைவர்களுக்கும், கோட்ட பொறுப்பாளர்களுக்கும் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து நினைவு பரிசை வழங்கினார். நிறைவு விழா பொதுக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த தென் சென்னை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முன்னதாக நேற்று காலை தமிழ் தாமரை யாத்திரையின் நிறைவு விழா சிறப்பு “மாநில நிர்வாகிகள் & மாவட்ட தலைவர்கள்” கூட்டம் நடைபெற்றது அதில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர்கள் திரு. K.N. லக்ஷ்மணன் அவர்கள், திரு. இல. கணேசன் அவர்கள், திரு. C.P ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் திரு. H. ராஜா அவர்களும் தமிழ் தாமரை யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.