logo
பாரத பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம்

5 கோடி மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க மத்திய அரசு இலக்கு. இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் 15,000 மேற்பட்ட இடங்களிலும், தமிழகத்தில் மட்டும் 1400 இடங்களில் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை மௌலிவாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாநில தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கலந்துகொண்டு 50 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பை வழங்கினார்.

மதியம் நன்மங்கலத்திலும், மாலை தாம்பரத்திலும் நடைபெற உள்ள இந்த சிறப்பு முகாமில் மாநில தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கலந்துகொள்கிறார்.

தற்போது 4 கோடி மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர், இன்னும் ஒரு வருடத்திற்குள் 5 கோடி மக்களுக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.