logo
மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக பாஜக உதவும்

நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதி வருகிறார் என்ற செய்தி மேலும் துயரத்தை தருகிறது.

மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழக பாஜக சார்பில் எங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு வருங்காலத்தில் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக பாஜக உதவும்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்.